உடற்பிடிப்பு (மசாஜ்) செய்வதால் என்ன பயன்?

உடற்பிடிப்பு (மசாஜ்) செய்தல் இயற்கை மருத்துவத்தில் முறையில் நீண்ட காலமாக ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தமிழில் உடற்பிடிப்பு என்று அழைத்தாலும் ஆங்கில மொழியின் தாக்கத்தினால் மசாஜ் (massage) என்பதே பேச்சு வழக்கில் பரவலான வழக்கில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா, இலங்கை, சீனா, கிரேக்கம், உரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் மசாஜ் ஒரு மருத்துவ சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ள. உடற்பிடிப்பு செய்வதால் உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு பலவிதத்திலும் நலம் செய்கின்றது.

மசாஜ்) செய்வதால் என்ன பயன்
மசாஜ் செய்வதால் என்ன பயன்?

உடற்பிடிப்பு (மசாஜ்) செய்வதன் மூலம் தோலில் காணப்படும் நுண் துளைகள் விரிவடைந்து, உடலில் காணப்படும் கெட்ட, தேவையற்ற கழிவுகள் வியர்வை மூலம் வெளியேற உதவி செய்யும். தசைகளில் ஏற்படும் இறுக்கத்தைத் குறைத்து, தசை வலியை நீக்கு உடற்பிடிப்பு உதவுகின்றது. நாம் கடினமான வேலை செய்யும்போது உடல் தசைகளில், “லக்டிக் ஆசிட்” (Lactic acid) எனப்படும் ஒருவித பால் அமிலம் சேரும். உடற்பிடிப்பு செய்யும்போது, அவ்வாறு சேர்ந்த அமிலத்தை நீக்கி, உடல் புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடன் இருக்க உதவுகிறது.

உடற்பிடிப்பு செய்யப்படும் பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், அவ்வுடல் பகுதிகளுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைத்தல் மற்றும் உறுப்புகளில் நோய் குணமாகும் தன்மையும் அதிகரித்தல் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மூலம், வீக்கம் போன்றவை நிலை ஏற்படுவது குறைவடையும். மேலும், இரத்தத்தில் அதிகளவில் பிராண வாயுவை எடுத்துச் செல்லும் திறனும் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறனும் அதிகரிக்கும்.

குறைந்த அழுத்தத்துடன் நரம்புகளில், மெதுவாகவும் மிதமாகவும் செய்யப்படும் உடற்பிடிப்பானது நரம்புகளில் காணப்படும் இறுக்கத்தை குறைப்பதுடன், அவற்றை மென்மையாக்கி, சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது. மேலும், நரம்புகளை இளக்கமடைய வைப்பதுடன் அதன் ஆற்றலை அதிகரிக்கவும் செய்கிறது.

வயிற்றில் உடற்பிடிப்பு செய்வதால், சமிபாட்டுத் தொகுதி தூண்டப்படுவதுடன், வயிற்றில் காணப்படும் கழிவுகள் வெளியேற உதவுகின்றது. மேலும் இது கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கவும் உதவுவதால், உடலின் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கச் செய்கின்றது.

உடற்பிடிப்பு செய்வதால், சிறுநீர் மண்டலத்தின் செயலாற்றலை நன்கு தூண்டுகிறது. இதன் மூலம் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, உடல் கழிவுகள் அதன் மூலம் விரைவில் வெளியேறுகின்றன.

முறையாக செய்யப்படும் உடற்பிடிப்பு, இதயத்தில் ஏற்படும் சுமையைக் குறைத்து, செயல் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

உடற்பிடிப்பதற்கு உலர்ந்த கைகளையே பயன்படுத்த வேண்டும். உடல் வறட்சியாக இருந்தால் அல்லது பலவீனமாக இருந்தால், எண்ணெய், ஈரத்துணி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் உபயோகப்படுத்துவது நல்லது.

எப்போது உடற்பிடித்தல் செய்யக்கூடாது?
  • காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் தவிர்க்க வேண்டும்.
  • கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றுப் பகுதியில் செய்வதை தவிர்ப்பது ஏற்படையது.
  • வயிற்றுப் போக்கு, வாயுத் தொல்லை, குடல் முளை அழற்சி, சிறு குடலில் புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய சிக்கல்கள் உடையவர்கள் வயிற்றில் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.
  • தோல் வியாதி உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

We do not accept Google restricted words. Please, write informative comments to those who search for spa and massage in Colombo and Sri Lanka.

No links, please! I will delete any comment with link

Any wrong information? Make a report.